search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயின் பறிப்பு"

    • மாலதி திண்டிவனம் கோர்ட்டில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • மர்ம நபர்கள் மாலதியின் தங்கச் செயினை பறிக்க மீண்டும் முயற்சி செய்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாலதி,அவரது சகோதரி மனோ சித்ரா. மாலதி திண்டிவனம் கோர்ட்டில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது சகோதரி மனோ சித்ரா குழந்தைகள் நல அலுவலராக உள்ளார்.இந்த நிலையில் 2 பேரும் பணியை முடித்துவிட்டு இரவு 8.30 மணி அளவில் திண்டிவனம் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் கோபாலபுரம் சென்று கொண்டிருந்தனர். 

    அப்பொழுது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையம் அருகே வரும்போது மாலதி அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயற்சி செய்தனர்.மாலதி மற்றும் மனோ சித்ரா 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். தொடர்ந்து மர்ம நபர்கள் மாலதியின் தங்கச் செயினை பறிக்க மீண்டும் முயற்சி செய்தனர்.மாலதி தங்கச் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் மாலதிக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து தாமதமாக வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர் :

    ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி கிருஷ்ணவேணி (வயது 68). இவர் சம்பவத்தன்று மாரப்பட்டு பகுதியில் இருக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு, பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது ஆம்பூரை சேர்ந்த சதீஷ் (வயது 24) மற்றும் ராகுல் (23) ஆகியோர் கிருஷ்ணவேணி அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து கிருஷ்ணவேணி ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி சதீஷ் மற்றும் ராகுலை நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செயினை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலையரசியை மோட்டா ர்சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர்.
    • மோட்டார் சைக்கிளுடன் வந்த மற்றொருவர் சிக்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோழியூரைச் சேர்ந்தவர் கலையரசி (வயது 46). இவர் இன்று காலை 10 மணியளவில் சாலையில் நடந்து சென்றார். அப்போது இவரை மோட்டா ர்சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கலையரசியை வழிமறித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறிக்க முயற்சித்தனர். அப்போது திருடன், திருடன் என கூச்சலிட்ட கலையரசி, செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதில் அறுத்து போன தங்க செயினின் ஒரு பகுதி திருடனின் கையில் சிக்கியது. கலையரசியின் கூச்சல் சப்தம் கேட்டு அங்கு கூடிய பொதுமக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இதில் ஒரு வாலிபர் தப்பியோடி விட்டார். மோட்டார் சைக்கிளுடன் வந்த மற்றொருவர் சிக்கினார். இவரை திட்டக்குடி போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய வாலிபர் யார் என்பது குறித்தும் திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க செயினை பறிக்க முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மூதாட்டியிடம் பணம் கேட்டு வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூபாய் 1500 பணத்தை பிடுங்கிச் செல்லுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
    • அர்ஜுன் மீது பல்வேறு செல்போன், செயின் பறிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ராமன் பிள்ளை தெருவில் கடந்த 10-ந் தேதி காலை 9.30 மணி அளவில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆட்டோவில் மயங்கிய நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் 108 அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த தகவலின் பெயரில் ஐஸ் அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயக்க நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மூதாட்டி கடந்த 14-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தார் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

    இதில் மது போதையில் வயதான மூதாட்டியிடம் பணம் கேட்டு வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூபாய் 1500 பணத்தை பிடுங்கிச் செல்லுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருவல்லிக்கேணி, நீலம் பாஷா தர்காவை சேர்ந்த அர்ஜுன் (எ) அஜி (வயது 30) மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அர்ஜுனை போலீசார் கைது செய்தனர்.

    அர்ஜுன் மீது பல்வேறு செல்போன், செயின் பறிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    கைதான வாலிபர் அர்ஜூன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் போதையில் இருந்த தான் மேலும் மது குடிப்பதற்காக மூதாட்டியை கொடூரமாக தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மூதாட்டியை அவர் தாக்கும் வீடியோ காட்சிகள் பதை பதைக்க வைக்கும் வகையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஹெல்மெட் அணிந்து மர்ம கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். அச்சகம் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சுதா (வயது 38) குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் சுதா தனது கணவர் கஜேந்திரனுடன் அருகே உள்ள பகுதிக்கு நடந்து சென்றார்.

    அப்போது மகளிர் கல்லூரி அருகே வரும்போது ஹெல்மேட் அணிந்தபடி பைக்கில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் கீழே இறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். சுதா கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம கும்பல் தப்பி சென்றனர்.

    இது குறித்து சுதா குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காந்தி மியூசியம் அருகே பெண் அலுவலரிடம் செயினை வாலிபர்கள் பறித்தனர்.
    • அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே மாத்தூர் குருத்தூரை சேர்ந்தவர் அமுதா (வயது52). இவர் சமூக நலத்துறையில் கிராம பெண்கள் நல அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    சித்திரை திருவிழாவை யொட்டி நடக்கும் பொருட்காட்சியில் சமூக நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் இருந்து இரவு வீட்டுக்கு திரும்பினார்.

    அவர் காந்தி மியூசியம் ரோட்டில் சென்றபோது பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அமுதா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • தபால் அலுவலக ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறித்தனர்
    • இந்த சம்பவம் குறித்து ராகவி அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவி (வயது 20). இவர் மங்களமேடு அடுத்துள்ள ரஞ்சன்குடி தபால் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பணி முடிந்து ராகவி தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ராகவி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துகொண்டு தப்பி சென்றான். இந்த சம்பவம் குறித்து ராகவி அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்மநபர் உள்ளே நுழைந்துள்ளார்.
    • மராத்தாள் மகன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 44). கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    வெள்ளியங்கிரி தனது 68 வயது தாய் மாராத்தாள் என்பவரை தன்னுடன் வைத்து கவனித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். மாராத்தாள் தனியாக ஒரு அறையில் படுத்து இருந்தார். நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை அவருக்கு தெரியாமல் கழற்றி தப்பிச் சென்றனர்.

    மறுநாள் செயின் மாயமானது கண்டு மராத்தாள் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து தனது மகனிடம் தெரிவித்தார். அவர் வீட்டை ஆய்வு செய்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் கிடத்த 5 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    • உமா எஸ்தர் குரும்பூர் ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • உமா கழுத்தில் கிடந்த 4 ½பவுன் தாலி செயினை மர்ம நபர் பறித்து கொண்டு தப்பி சென்றார்.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள யோகரத்தினம் நகரை சேர்ந்தவர் அருள்தாஸ் மனைவி உமா எஸ்தர் (வயது 41). இவர் நேற்று காலை குரும்பூர் ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் உமா கழுத்தில் கிடந்த 4 ½பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • பெண்ணிடம் செயின் பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
    • இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், ராமானூர் பகுதியை சேர்ந்த குணசே கரன் மகள் யமுனா (வயது 28) இவர் வெள்ளியணை அருகே, காக்காவாடி பஸ் ஸ்டாப்பிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்தஅடையாளம் தெரியாத இரண்டு பேர், யமுனா கழுத்தில் அணிந்திருந்த ஒன்றேகால் பவுன், செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து, யமுனா அளித்த புகாரின்படி, வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.




    • நூதன முறையில் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    சோளிங்கர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பாய் (வயது 65). கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக ஆற்காடு வரை நேற்று மதியம் பஸ்சில் வந்தார்.

    பின்னர் அங்கிருந்து வெங்கடாபுரம் செல்வ தற்காக ஆற்காடு பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் ராம்பாய்யிடம் ஒரு பேப்பரை கொடுத்து இதை சிறிது நேரம் வைத்திருங்கள் பின்னர் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த மூதாட்டி பேப்பரை வாங்கி வைத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் மூதாட்டி சுயநினைவு இழந்தார். அப்போது அந்த நபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்த மூதாட்டி நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது குறித்து அவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • பைக் பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் எஸ் ஆர் கே பகுதி மற்றும் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மங்கம்மா பேட்டை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 22) என்பதும், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிபில்ஸ்பேட்டை பகுதியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    பின்னர் கோடீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் போலீசார் செய்தனர்.

    ×